• Sep 12 2025

டெல்லியில் பிரமாண்ட மாளிகையை வாங்கியிருக்கும் சோனம் கபூர்- அதன் பெறுமதி எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பாலிவூட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர்.இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, மேலும் தனுஷுடன் இணைந்து அம்பிகாபதி என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்திருந்தார்.இவர் பிரபல  நடிகர் அனில் கபூரின் மகளாவார்.


இவர் கடந்த 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் 'சாவரியா' படம் மூலம் பாலிவூட்டில் அறிமுகமாகினார்.இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னரும் சோனம் கபூர் பல படங்களில் நடித்து வருகின்றார்.


 சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தாலும் டெல்லியில் ரூ.173 கோடியில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்.பிருத்திவிராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த மாளிகையானது 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. 


 சோனம் கபூர் தம்பதி இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் டெல்லியில் உள்ள இந்த வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்களாம். இதற்காக இந்த மாளிகையில் பல்வேறு ஆடம்பர வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மாளிகையின் உட்புறத்தில் ஸ்டைலான மார்பிள் தரை, நேர்த்தியான மர தளவாடங்களால் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் என மாளிகை அதிநவீன வசதிகளுடன் இந்த மாளிகை ஜொலிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement