• Jul 24 2025

ஜவான் படத்திலிருந்து லீக்கான பாடல் காட்சி- பிரமாண்ட கப்பலில் நயன்தாராவுடன் நடனமாடும் ஷாருக்கான்- அதிர்ச்சியில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. நண்பன் படத்தில் விஜய்யுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அப்போதே சொன்ன தெறி கதையை ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த கையோடு இயக்கி ஹிட் கொடுத்தார்.

அட்லி உடனான பயணம் விஜய்க்கு பிடித்துப் போக தொடர்ந்து மெர்சல் படத்தில் இணைந்தனர். அந்த படமும் தாறுமாறு ஹிட் அடிக்க அதன் பின்னர் பிகிலும் வசூலில் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக ஷாருக்கானுக்காக பல ஆண்டுகள் காத்திருந்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லி.


இந்நிலையில், தற்போது சொகுசு படகின் டாப்பில் நடிகை நயன்தாராவுடன் ஷாருக்கான் டூயட் பாடும் அட்டகாசமான பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வயதான கெட்டப்பில் ஷாருக்கான் இருக்கும் காட்சிகள் லீக் ஆகி தெரிந்து விட்டது. மேலும், மெட்டல் பெல்ட்டை கொண்டு எதிரிகளை ஷாருக்கான் பந்தாடும் செம ஆக்‌ஷன் காட்சி ஒன்றும் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சமீபத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சீதாராமம் படத்திலும் இதே போன்று படகின் மேல் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடனம் ஆடுவார்கள். அந்த எஃபெக்ட் இந்த படத்திலும் எதிரொலிக்கிறதா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஏற்கனவே ஷாருக்கானின் பழைய சூப்பர் ஹிட் படத்திலும் இதே போன்று கப்பலில் நடனம் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement