• Jul 25 2025

தென்னிந்திய நடிகைகள் உடை வாங்கும் போது கூட அசிங்கப்படுத்துவாங்க- நடிகை சமந்தா அளித்த பரபரப்பு பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் நடிகர் கௌதமேனன் இயக்கத்தில் வெளியான Ye Maaya Chesave படத்தில், நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, தமிழில் இந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என ரீமேக் செய்யப்பட்ட போது, ஒரு ஒரு கேமியோ ரோலில் நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து, பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நான் ஈ, தீயா வேலை செய்யணும் குமாரு, கத்தி, அஞ்சான், தங்கமகன், போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தார்.


குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், விக்ரம், தனுஷ், போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் என்கிற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தார்.தற்போது தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருக்க அதிகப்படியான உடற்பயிற்சிகள் மற்றும் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

 மேலும் சமந்தா நடிப்பில் நேற்று வெளியான, சகுந்தலம் திரைப்படம், கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகை என்றால் அசிங்கப்படுத்துவாங்க என்று, இவர் கூறியுள்ள கருத்துதான் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.


மேலும் இது குறித்து பேசுகையில், பல வருடங்களுக்கு முன்பெல்லாம் ஹிந்தி சினிமா தான் முன்னணியில் இருந்தது. தற்போது ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு, கன்னட, படங்கள் அதிகம் சாதித்து வருவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் காஸ்டியூம் டிசைனரிடம் இருந்து உடைகள் வாங்குவது கூட மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். காரணம் அந்த அளவிற்கு அசிங்கப்படுத்துவாங்க... நீ யார்? சவுத் ஆக்டரா? என்றெல்லாம் கேட்பார்கள் என கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



Advertisement

Advertisement