• Jul 26 2025

குடியரசு தினத்தை முன்னிட்டு ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர்,என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவான ‘ 1947 ஆகஸ்ட் 16’ என்ற திரைப்படத்தில்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ளர், இது ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் சிறப்பு போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். 



ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு கிராமத்து இளைஞன் போராடும் வரலாற்று கதை இது. படத்தை முருகதாஸிடம் நீண்ட கால உதவி இயக்குநராக இருந்த என்எஸ் பொன் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் தலைப்பு  போல, இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு நாளுக்குப் பிறகுதான் படத்தின் நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழ்நாட்டின் சில இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளதாக சொல்லப்படுகிறது.



Advertisement

Advertisement