• Jul 26 2025

இலங்கை அழகியின் நெகிழ்ச்சிச் செயல் - வைரலாகும் புகைப்படங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய நாகரீக உலகில் மாடலிங் துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் மாடலிங் துறையில் பிரபல்யமடைந்து வரும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள  அழகியாக பியூமி ஹன்சமாலி திகழ்கின்றார். அத்துடன் இவர் பியூமி ஹன்சமாலி சமூக சேவையிலும் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில்  தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர்  இரண்டு ஆடுகள் வாங்குவதற்காக  ஆட்டு பண்ணைக்கு சென்றுள்ளார்.அப்போது நிறைய ஆடுகள் வெட்டுவதற்காக வளர்க்கப்படுகிறது என  கேள்விப்பட்டார்.

அங்கிருந்த  அனைத்து ஆடுகளையும்  பார்க்கும் போது பாவமாக இருந்துள்ளதால் அங்கிருந்த எல்லா  ஆடுகளை 10 இலட்சம்  ரூபா கொடுத்து வாங்கியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பியூமி ஹன்சமாலி ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

"நானும் நீங்களும் ஒரு நாள் இந்த வாழ்க்கையை விட்டு போவோம்.எனவே நமது வங்கி புத்தகத்தில் பணத்தை வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை செய்தால் புண்ணியமே எனக்கு கிடைக்கும். நான் பிழைக்க பணம் இருந்தால் போதும். நீங்கள் சம்பாதித்த பணத்தில் சிலவற்றை சேகரித்து  இந்த மாதிரி தொண்டு பணிகளுக்காக சேமித்து கொள்ளுங்கள்.இது ஒரு நன்றி மட்டுமே.இந்தப் பணம் நான் எனது புதிய சலூன் கட்டச் சேகரித்த பணம். இதை அதிசயமான மகிழ்ச்சியாக உணர்கிறேன்.இன்று என்னாலேயே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என ஆடு வாங்கிய கதையை மிக அழகாக கூறியிருந்தார்.

மேலும், இவரது மனிதாபிமான செயல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்கள் மற்றும் தமது  ஆதரவையும் தெரிவித்து வருவதுடன்  பியூமி ஹன்சமாலியின் ஆடு வாங்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றன.


Advertisement

Advertisement