• Jul 25 2025

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிய இலங்கைப் பிரபலம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாப் படங்களில் வேற்று மொழியை சேர்ந்த வெளிநாட்டு நடிகைகள் பலரும் நடிக்க வருகிறார்கள். உதாரணமாக லண்டன் நடிகை எமி ஜாக்சன் தமிழில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளமையைக் குறிப்பிட முடியும். அதேபோல் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தில் உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்து இருந்தார். 

அதுமட்டுமல்லாது சன்னிலியோன் கனடாவில் இருந்து வந்து பல தமிழ்ப் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.மேலும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் ஜோடியாக சுவீடன் நடிகை எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இவ்வாறு பலரையும் கூறிச் செல்லலாம். 


அந்தவகையில் தற்போது இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையான தசுனி தமிழில் 'அண்ணே' என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதாவது 'அண்ணே' என்ற இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து அவரே டைரக்டும் செய்கிறார். 

மேலும் இவர் அகத்தியன் இயக்கிய 'ராமகிருஷ்ணா' படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து 'அண்ணே' படம் உருவாகிறது. 


இப்படத்தில் அக்ஷயா, பேலிஜா, பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், லட்சன், ரஞ்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யோகிபாபுவிடமும் நடிக்க பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார்கள். இந்த படம் 'அய்யா' என்ற பெயரில் சிங்கள மொழியிலும் தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement