• Jul 26 2025

தனது சொகுசு வீட்டை கோடிக்ணக்கில் விற்ற ஸ்ரீதேவி மகள்-எந்த நடிகருக்கு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவூட் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஜான்வி கபூர்.

இவர் தன் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். மும்பையில் அபார்ட்மென்ட்டுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.

மேலும் முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு மும்பை ஜுஹு பகுதியில் 14, 15, 16வது மாடிகளை அடக்கிய ட்ரிப்லெக்ஸ் அபார்ட்மென்ட்டை ரூ. 39 கோடிக்கு வாங்கினார்.

3 ஆயிரத்து 456 சதுர அடியில் அமைந்திருக்கும் அந்த அபார்ட்மென்ட்டுக்கு 6 பார்க்கிங் லாட் உண்டு. இந்நிலையில் அந்த வீட்டை ஜான்வியிடம் இருந்து நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரின் மனைவியான பத்ரலேகா ரூ. 43.87 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

அத்தோடு மும்பையில் அண்மையில் சொகுசு வீடு வாங்கிய பாலிவுட் பிரபலங்கள் பட்டியலில் ராஜ்குமார் ராவ் சேர்ந்திருக்கிறார்.மேலும் முன்னதாக ஷாருக்கானின் பங்களாவான மன்னத் அருகே ரூ. 119 கோடிக்கு வீடு வாங்கினார் ரன்வீர் சிங்.

கெரியரை பொறுத்தவரை ராஜ்குமார் ராவ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹிட்- தி ஃபர்ஸ்ட் கேஸ். அத்தோடு மோனிகா, ஓ மை டார்லிங், ஜான்வி கபூருடன் சேர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement