• Jul 25 2025

பிரபல பாடகரைக் காதலிக்கும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்- முதல் படம் ரிலீஸாக முதலே காதலா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தவர் தான் ஸ்ரீதேவி.இவர் மறைந்ததைத் தொடர்ந்து இவருடைய இரண்டு பிள்ளைகளும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் இவரது இரண்டாவது மகள் குறித்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அதாவது  ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர்  ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியுள்ளார்.இவர் கனடாவில் வசித்து வரும் பாடகர் அம்ரித்பால் சிங் தில்லன் என்கிற ஏ.பி. தில்லன் என்பவரைக் காதலித்து வருவதாக கூறப்படுகின்றது.


அவர் ட்ரூ ஸ்டோரீஸ் என்கிற பெயரில் புது பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீ சிரிக்கும்போது குஷி கபூர் போன்று இருக்கிறாய் என்கிற வரி வந்திருக்கிறது. அதை கேட்டவர்களோ, தில்லனும், குஷி கபூரும் காதலிக்கிறார்கள் போன்று என பேசத் துவங்கிவிட்டார்கள்.

குஷி கபூரும், தில்லனும் காதலிப்பதை யாரும் உறுதி செய்யவில்லை. தில்லன் ஏதோ ஒரு ஃப்ளோவில் குஷி கபூர் பெயரை தன் பாட்டில் பயன்படுத்த அது இப்படி காதல் பேச்சை கிளப்பிவிடும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். 

குஷியின் முதல் படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் அவர் காதலிப்பதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குஷியை காதலிக்கவில்லை என்றால் தில்லன் ஏன் அவர் பெயரை பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.குஷி கபூர் நடிகையாக அறிமுகமாகும் ஆர்ச்சீஸ் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் மகள் சுஹானா, அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார்கள்.


குஷி கபூருக்கு மாடலிங் மீது தான் முதலில் ஆர்வம் இருந்தது. அதன் பிறகே அம்மா, அக்கா போன்று நடிகையாக விரும்பினார். அந்த நேரத்தில் ஆர்ச்சீஸ் பட வாய்ப்பு வரவே ஒப்புக் கொண்டார். வெயிட்டாக இருந்த குஷி கபூர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து படு ஸ்லிம்மாகி அனைவரையும் வியக்க வைத்தார். அப்படி இருந்த குஷியா இப்படியாகிவிட்டார் என பிரபலங்களும், ரசிகர்களும் வியந்து பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement