• Jul 24 2025

Super singer மானசியின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய ஸ்ரீதர் சேனா... வைரல் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் மானசி. அத்தோடு இதற்கு முன்னதாக 'சிங்கார வேலனே' என்ற பாடலை ஒரு மியூசிக் குரூப்பில் திருவண்ணாமலையில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். 


பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8ஆவது சீசனில் கலந்து கொண்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகவும் தேர்வாகி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து பல பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடி வெளியிட்ட வண்ணம் தான் இருக்கின்றார். 


இவரின் இசைக்கும், இனிமையான குரலிற்கும் மயங்காதவர்கள் இல்லை. மானசி குரலில் மட்டுமன்றி தன்னுடைய அழகினாலும் பல இளைஞர்களைக் கொள்ளை அடித்திருக்கின்றார். இதனால் இவரை ஒரு பாடகியாய் பார்த்த ரசிகர்கள் இவர் ஒரு நடிகையாகவும் மாற வேண்டும் எனக் கூறி வருகின்றனர். 


இந்நிலையில் மானசியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஸ்ரீதர் சேனா மானசியின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த வீடியோவை மானசி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.   


Advertisement

Advertisement