• Jul 25 2025

இலங்கை ஜனனி இப்படிப்பட்டவர் தான்... வீடியோ ஆதாரங்களை பகிர்ந்து திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனிரசிகர் கூட்டமே உள்ளது.அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-6 இல் 21 போட்டியாளர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் அது ஜனனிக்கு தான்.

இவரின் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் அண்மைய நாட்களாக ஜனனி அமுதவாணனின் கை பாகையாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜனனி பேசிய வீடியோவையும், தற்போது ஜனனி பேசியிருக்கும் வீடியோவைவும் சமூகவலைத்தளத்தில்  நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

அதாவது, இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் தனலட்சுமி - ஜிபி முத்து இடையே சர்ச்சை எழுந்தது. இதன்போது ரீல்ஸ் வீடியோ குறித்து தனம் பேசி இருந்தார். எனினும் அதற்கு கோவம் அடைந்த ஜனனி, பிக் பாஸ் வீட்டிலுள்ள இருப்பவர்கள் எல்லோரும் அக்கா, தங்கை, அண்ணன் போன்ற உறவுகள் உடன் ஒரு குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும்.



இது ஒன்னும் ரீல்ஸ் கிடையாது என்று ஜனனி பேசியிருந்தார்.இதே 42வது நாளில் அமுதவாணனிடம், இங்கு எல்லோருமே போட்டியாளர்கள் தான்..இது ஒன்றும் வீடு கிடையாது. விளையாட தான் வந்திருக்கோம். அவர்கள் விளையாட்டை அவர்கள் தான் தனித்து விளையாட வேண்டும் என்று பேசி உள்ளார்.

மேலும்  இப்படி மாறி மாறி ஜனனி பேசியிருக்கும் வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, நீ ஒரு டிராமா குயின்! போலியாக நடிக்காதே என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.  




Advertisement

Advertisement