• Jul 27 2025

தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

சிம்புவை காதலிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் நக்ஸத்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களிடத்தே வைரலாக பரவி வருகிறது.

சீரியல் நடிகையான ஸ்ரீ நிதி, நெருங்கிய தோழியான நட்சத்திராவை பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு கூறி இருந்தார். அதில், நட்சத்திரா ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்தார்.

ஆனால் அவ நிறையவே தப்பான விஷயங்கள் செய்திருக்கா.. அவ ஒரு பையனை காதலிக்கிறார். ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது.

ஆனால் எங்களுக்கு அது தெரியாது. இதனால் நட்சத்திராவின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாது., விஜே சித்துவின் நிலைமை நட்சத்திராவுக்கு வந்துவிடக்கூடாது என தெரிவித்து இருந்தார்.

இதற்கு விளக்கமளித்த நட்சத்திரா, ஸ்ரீநிதி கூறியது எல்லாம் பொய் எனவும், அவர் ஏதோ மன அழுத்ததில் சொல்லி இருக்கிறார் எனவும், அவர் சொல்வதை எல்லாம் கண்டுக்கொள்ள வேண்டாம். அவள் என் மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துள்ளார் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையில், வீட்டு பெரியவர்கள் முன்னிலையில், நட்சத்திரா விஷ்வா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. அத்தோடு, நட்சத்திராவின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு ஒரு நிலையில், நட்சத்திராவின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உன் மீது உள்ள அன்பு மட்டும் அக்கறையுடன் வாழ்க வளமுடன் எனவும், உங்கள் SSR’ என்று பதிவிட்டுள்ளார்.

அத்தோடு , அந்த புகைப்படத்தில் ‘Family’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை கேலி செய்யும் விதமாக எமோஜி ஒன்றையும் பதிவிட்டு இருந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement