• Jul 25 2025

ஸ்ருதி ஹாசனுக்கு என் மடியில் வைத்து தான் மொட்டை போட்டார்கள்- விக்ரம் பட நடிகரின் வைரலாகும் பேட்டி

stella / 3 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடிகர் சந்தான பாரதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தனவாக அமைந்துள்ளன. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சந்தான பாரதியும் அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

இதில் கமல்ஹாசன் நடிகர் ஆவதற்கு முன்னரே இருவரும் நண்பர்களாக இருந்தோம். ஒரே பகுதியில் டுடோரியலில் ஒன்றாக படித்து, ஒன்றாக உடற்பயிற்சி செய்து, ஒன்றாகவே திரைத் துறையில் வளர்ந்தவர்கள். கமல் என் நண்பன் இல்லை, என் நண்பனாக இருந்தவன்தான் பிற்காலத்தில் கமல் ஹாசன் ஆனார். ஸ்ருதி ஹாசனுக்கு மொட்டை போடும்போது கூட என் மடியில் வைத்துதான் மொட்டை போட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் சந்தான பாரதி நடித்திருந்த ஏஜண்ட் உப்பிலியப்பன் கதாப்பாத்திரமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. படம் பார்க்கும் வரை தானும் ஒரு ஏஜண்ட் என்று தனக்கு தெரியாது. படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement