• Sep 12 2025

கல்லெறிபட்டு மயங்கி விழுந்த சூர்யா- பதறிப்போய் கதறிய வெண்ணிலா- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த  சீரியலில்  தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு ரவுடிக் கும்பலிடம் மாட்டுப்பட்டிருக்கின்றனர்.

இதனால் வெண்ணிலா தான் சூர்யாவை கூட்டிட்டு போய் இருக்க வேண்டும் என்று வெண்ணிலா குடும்பத்தை தவறாகப் பேசி வருகின்றார் சூர்யாவின் பெரியம்மா. இதனால் வெண்ணிலாவும் சூர்யாவும் எப்போது மீண்டும் திரும்பி வீட்டுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவும் வெண்ணிலாவும் ஒரு ரூமுக்குள் அடைபட்டு இருக்கின்றனர். இப்போது ரவுடிக்கும்பல் அடிப்பதற்காக போகின்றனர். இதனால் சூர்யா வெண்ணிலாவிடம் என்ன நடக்கப் போகுதோ தெரில நான திரும்பி வந்தால் என்னை ஏற்றுக் கொள்வதானே என்று கேட்கின்றார்.

அப்போது வெண்ணிலா என்ன செய்வதென்று தெரியாமல் அழுகின்றார். பின்னர் சூர்யா வெளியில் வரும் போது கல்லெடுத்து அடிக்கின்றனர்.இதனால் சூர்யா மயங்கி விழ வெண்ணிலா பதறிப்போய் ஓடி சூர்யாவைத் தாங்குகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement