• Jul 26 2025

நிறுத்து நான் உன் கண்ணம்மா இல்லை... உண்மையை சொன்ன சித்ரா... மனமுடைந்த பாரதி... அதிரடித் திருப்பத்துடன் வெளிவந்த 'ப்ரோமோ' வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


அதில் கடந்த வாரம் சௌந்தர்யா பாரதிக்கு வெள்ளைக் காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப்போவதாக கூறி இருந்தார். இதனையடுத்து கண்ணம்மா பாரதியை வெறுக்கத் தொடங்கி விட்டார்.


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பாரதி கண்ணம்மாவிடம் "உன் மேல நான் வச்சிருக்கிற காதல் உண்மையானது, மூச்சிற்கு முன்னூறு முறை உன் பேர் மட்டும் தான் என் மனதில் ஓடிற்று இருக்கு, கண்ணம்மா என்ற ஒருத்தி மேல் இந்த பாரதி பைத்தியம் ஆகிட்டான்" எனக் கூறுகின்றார்.


அதைக் கேட்டதும் கண்ணம்மா நிறுத்துமாறு கூறுகின்றார். பின்னர் "கண்ணம்மா கண்ணம்மா என்று மூச்சிற்கு முன்னூறு தடவை சொல்றியே அந்த உன் ப்ரண்ட் கண்ணம்மா நான் இல்லை, நான் பத்து வருஷம் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனையை அனுபவிச்சிட்டு வெளிய வந்தவள். என் பேரு சித்ரா. என்னால உன் காதலை ஏத்துக்க முடியாது பாரதி" எனக் கூறி செல்கின்றார்.

இதனைக் கேட்டதும் பாரதி மனமுடைந்து போய் நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement