• Jul 26 2025

நடிகர்களை தாக்கும் விநோத நோய்கள்!- வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட இளம் நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சசோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா மயோசிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.அதே போல பாலிவூட் நடிகர் சல்மான்கானை ரை ஜமினல் நியூரல் ஜிமா என்னும் நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமிதாப்பச்சனுக்கு வந்த மயஸ்தினியா கிரேவிஸ் என்னும் தசை இழப்பு நோய் வந்ததாகவும் கூறப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நடிகர் கிருத்திக்ரோஷனின் மூளையில் இரண்டு மாதங்களாக இருந்த இரத்தக்கட்டி லிசாராவுக்கு வந்த வெள்ளையணு புற்று நோய் என்ற பல வினோத நோய்கள் நடிகர்களுக்கு வந்திருப்பது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


இந்த நிலையில் பிரபல பாலிவூட் நடிகர் வருண் தவான் வெஸ்கபூர் ஹைஃபோர் பங்சன் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந் நோய் என்பது உள்காதுடனும் கண்களுடனும் இணைந்து உடலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


எனவே இந்த நோயினால் மயக்கம் ஏற்பட்டு உடலில் உபாதைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிக இருப்பதால் இந்த நோய்க்காக பிரத்தியேக பயிற்சிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வுருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement