• Jul 25 2025

மீண்டும் வெளியாகவுள்ள பாபா படத்தின் ஸ்டைலிஷ் ட்ரெய்லர் ரிலீஸ்!-கண்ணா இது எப்படி இருக்கு... '

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாபா.இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்ததோடு இவருடன் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையில்   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் ட்ரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படம் தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் கூறியுள்ளார். இந்த பாபா டிரெய்லரில் I am Coming என்ற வசனம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் பாபா படத்தின் ரீ ரிலீஸிற்கு டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement