• Jul 26 2025

இப்படியொரு பெரிய மனசா? தண்ணீர் கிண்ணத்துடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..! என்ன பண்ணுறாரு பாருங்க ...வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கோடை காலத்தில் விலங்குகள், பிராணிகள், பறவைகள் நீர் அருந்த வசதியாக கிண்ணங்கள் மற்றும் மண் கலயங்களில் நீர் நிரப்பி வைக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவரும் சிறிய தொட்டியில் நீர் நிரப்பி வைக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஜாக்குலின் வெளியிட்டுள்ள பதிவில், "வெயில் காலத்தில் விலங்குகள் பறவைகளுக்காக உங்கள் வீடுகளின் முன்னால் மண் கலயங்களில் நீர் நிரப்பி வையுங்கள். நீரை தேங்க விடாமல் தினமும் புதிய நீரை நிரப்பி வையுங்கள். இது கோடையில் நீர் இன்றி கஷ்டப்படும் விலங்குகள். பிராணிகள், பறவைகளுக்கு உதவும்'' என்று கூறியுள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் யோசனைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். ஜாக்குலின் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவரிடம் இருந்து ரூ.10 கோடி பரிசு பொருட்களை பெற்றதாகவும் சர்ச்சையில் சிக்கி அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார்.

சுகேஷ் மோசடி பேர்வழி என்று தனக்கு தெரியாது என்றும் எனது உணர்வோடு விளையாடி என்னை ஏமாற்றி விட்டார் என்றும் ஜாக்குலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement