• Jul 23 2025

திடீரென இடைநிறுத்தப்படும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங்- படக்குழுவினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலிவுட்டின் தனித்துவமான இயக்குநர்களில் மகிழ் திருமேனியும் ஒருவர்.இவர் 2010ல் வெளியான முன்தினம் பார்த்தேனே திரைப்படம் மூலம் இயக்குநரானார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தடையற தாக்க சூப்பர் ஹிட் அடித்தது.

ஆக்‌ஷன் ஜானர் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான மகிழ் திருமேனி, தொடர்ந்து மீகாமன், தடம், கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த வரிசையில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 4ம் தேதி ஆரம்பமாகியது.


படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மேலும் தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் மற்றும் திரிஷாவிற்கும் இடையிலான காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு ஒரு புதிய பிரச்சினை வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தற்போது போர் நடந்து வருவதால், துபாய் அசர்பைஜான் போன்ற நாடுகளில் அதனுடைய தாக்கம் இருக்கின்றதாம்.


ல் விமான போக்குவரத்துக்கு போன்ற விஷயங்களை தடை செய்ய அந்த நாட்டு அரசாங்கம் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழுவினரை எச்சரித்துள்ளார்களாம்.இதன் காரணமாக படப்பிடிப்பு தடைபடும் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement