• Jul 24 2025

நடிகை ஹன்சிகா வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்- அவரே போட்ட கண்ணீர் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இதனால் இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடிக்க கணவர் கிரீன் சிக்னல் காட்டியதால் தற்போது மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி நடித்து வருகின்றார்.


சமீபத்தில் கூட ஆதிக்கு ஜோடியாக இவர் நடித்த பார்ட்னர் திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.நடிகை ஹன்சிகாவுக்கு சினிமாவை எந்த அளவு பிடிக்குமோ அதே அளவு செல்லப்பிராணிகளை வளர்க்கவும் பிடிக்கும். இதனால் இவர் தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில், ஹன்சிகா தன் மகன்போல் வளர்த்து வந்த புரூஸோ என்கிற நாய்க்குட்டி தற்போது மரணம் அடைந்துள்ளது. 


அதன் மறைவு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.அந்த பதிவில், அன்புள்ள புருஸோ, உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம், என்னுடைய சிறந்த மகன் நீ. உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமைதியாய் ஓய்வெடு, டெடி மற்றும் மர்பியும் உன்னை மிஸ் பண்ணுகிறார்கள். லவ் யூ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement