• Jul 23 2025

காலில் கட்டுடன் சுஹானா... ஷாருக்கான் மகளுக்கு என்ன ஆச்சு...? குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் கிங்கானாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரைத் தொடர்ந்து இவரின் மகள் சுஹானாவும் விரைவில் 'ஆர்ச்சிஸ்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அக்ஸ்த்யா நந்தா,  போனி கபூரின் மற்றொரு மகளான குஷி கபூர் உள்ளிட்ட பலரும் அறிமுகமாக உள்ளனர்.


அந்தவகையில் சினிமாவுக்காக நடனக்கலைகளை முறைப்படி கற்றுத் தேர்ந்து வரும் சுஹானா, சமீபத்தில் தன் கால்களில் கட்டுப்போட்ட நிலையில் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


அந்தவகையில் இப்பதிவில் அவர் ஓ... எனும்  ரியாக்‌ஷன் உடனும் சோக ஸ்மைலியுடனும் போட்டோவை பகிர்ந்துள்ளதால், இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சுஹானா கால்களை உடைத்துக் கொண்டாரா என நினைத்து கவலை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சுஹானா பாலே நடனப் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாகவும், பாலே நடனப்பயிற்சியின் போது இதுபோல் கால்களில் கட்டுப்போட்டு தான் பயிற்சி கொள்கிறார்கள் என்றும் மற்றொருபுறம் வேறு சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement