• Jul 24 2025

'எதிர்நீச்சல்' சீரியலில் திடீர் மாற்றம்...? சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆனாலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பைத் தொடர்ந்து இந்த சீரியலினைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


இதனையடுத்து அடுத்த ஆதிகுணசேகன் யார் என்ற கேள்வி பல நாட்களாக எழுந்து வருகின்றது. வேல ராமமூர்த்தி, பசுபதி, ராதாரவி எனப் பலரின் பெயர்கள் அடிபட்டாலும் இதுவரை உறுதியான தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் வேல ராமமூர்த்தி வண்டியிலிருந்து இறங்கும் வண்ணம் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியலில் அதிரடி மாற்றம் ஒன்று இடம்பெற்று உள்ளது. அதாவது இதுவரை காலமும்  வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்ற இந்த சீரியலானது  இனிமேல் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக திடீரென சீரியல் நேரத்தை மாற்றியமை ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement