• Sep 11 2025

அனுவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லப்போன சுந்தரியின் அம்மா- பதற்றத்தில் இருக்கும் கார்த்திக்- Sundari Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் தற்பொழுது அதன் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது சுந்தரி படித்து முடித்து விட்டு கலெக்டர் இன்டர்வியூவுக்கும் போய்ட்டு வந்து விட்டார். அத்தோடு அனுவுக்கு கார்த்திக் சுந்தரியைத் முதலில் திருமணம் செய்து உள்ளார் என்ற உண்மை தெரிந்தும் அவர் நம்பவில்லை.


அப்போது அனுவுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. இதனால் அவருடைய அம்மா பார்க்கச் சென்ற போது கூட அனு அவருடைய அம்மாவைப் பார்க்கவில்லை. இப்படியான நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது அனுவுக்கு குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்ததும் சுந்தரியின் அம்மா நேராக அனுவைப் பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டலுக்குச் சென்று விட்டார். இதை அறிந்த சுந்தரி அம்மாவைத் தடுப்பதற்காக ஹாஸ்பிட்டலுக்கு போகின்றார். மேலும் கார்த்திக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement