• Jul 25 2025

ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போலவே கிஸ் கொடுத்த சன்னிலியோன்- குத்தாட்டம் போட்ட ஜி.பி முத்து வாழ்றான்யா மனுஷன்!

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஜி.பி முத்து ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஓ மை கோஸ்ட்'. இந்தத் திரைப்படம் நாளைய தினம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சன்னி லியோன் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளதால், இந்த படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியானது  நடைபெற்றது.


இதில் சன்னி லியோன், ஜிபி முத்து, சதீஷ் உள்ளிட்ட ஓ மை கோஸ்ட் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையேறிய சன்னி லியோன், வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் விஜய் கொடுத்த கிஸ் போன்று அவரும் ரசிகர்களை நோக்கி கொடுத்தார். சன்னி லியோனிடம் இருந்து ரஞ்சிதமே கிஸ்ஸை எதிர்பார்க்காத ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். 


அப்போது அவரது அருகில் நின்று கொண்டிருந்த ஜிபி முத்துவும் சன்னி லியோனுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து அதகளமாக பேசி, ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்திருந்தார். "இந்தப் படத்துல சன்னி லியோன் கூட நடிச்சிருக்கேன் நண்பர்களே. சன்னி லியோன் கூட நடிக்குறேன்னு தெரிஞ்சதும் நிறைய கமெண்ட்ஸ்லாம் வரும். அப்போ சன்னி லியோன் அக்கா யார்ன்னே எனக்கு தெரியாது, அதனால அவங்க நடிச்ச படங்கள் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்" என சொன்னதும், மொத்த அரங்கமும் சிரிப்பால் அதிரிந்தது. மேலும், "இதில் சன்னி லியோன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடிருக்கேன்" என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement