• Jul 26 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுத புகழ், சுனிதா...சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.தற்போது குக் வித் கோமாளி சீசன் 4  நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறியுள்ளனர்.

எனினும் இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதி கட்டத்தில் இருந்தனர்.


இதில் ஷெரினை விட சற்று குறைவான மதிப்பெண்களை பெற்றதால் ராஜ் அய்யப்பா இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து  திடீரென வெளியேறியுள்ளார்.

ராஜ் அய்யப்பா எலிமினேட் என நடுவர்கள் கூறியவுடன், புகழ், சுனிதா மற்றும் சில கண்கலங்கினார்கள். அதே குக் வித் கோமாளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா பகிர்ந்துகொண்டார்.


மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார் ராஜ் அய்யப்பா.

Advertisement

Advertisement