• Jul 26 2025

"தமிழ் Bigg Boss -ல் சன்னி லியோன்?".. Wild Card -ஆ? Guest-ஆ?".. வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்னி லியோன் நடித்த  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் பிரத்தியோக ஊடகம்  ஒன்றிற்கு ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எங்கேயாவது ஒரு இடத்தில் வருத்தப்பட்டது உண்டா? என கேட்கப்பட்டபோது,  “இல்லை. இல்லை எப்போதும் இல்லை. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கை லட்சியம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது தான். 

அதாவது ஓரிரு நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்பினேன். இந்திய அளவில் பிரபலமான டிவி சேனலில் அமெரிக்காவில் இருந்து வந்து சன்னி லியோன் பங்கேற்கிறார், அதுவும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தொழில்துறையில் பின்னணியில் இருந்து வந்து அதுதான் எனது மிகப்பெரிய தொடக்கமாக இருந்தது, இந்தியாவில், பாலிவுட் திரையுலகம்,  டிவி சேனலில் அடியெடுத்து வைப்பது பெரிதாக இருந்தது.மேலும்  அது தான் எனது லட்சிமாக இருந்தது. பாருங்கள்  இப்போது நான் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஏனென்றால், தற்போது தமிழ் பிக் பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரி நடைபெற காத்திருக்கிறது. அதில் நீங்கள் செல்ல விரும்புவீர்களா?” என கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த, சன்னி லியோன், “இல்லை..... நான் விருந்தினராக போயிட்டு உடனே வெளியே வந்துடனும். அங்கயே இருந்துவிடமாட்டேன். அவங்க கூப்பிட்டாங்கன்னா போக விரும்புறேன்.” என  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement