• Jul 25 2025

ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்-அடடே இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டவர்.இவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் இவரது திரைத்துறை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை இடம்பெற்றது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன்னுடைய கேரக்டரும் கதைக்களங்களுக்கும் முக்கியத்தும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய கேரக்டரின் துவக்கத்திலிருந்தே சிறிய கேரக்ராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் உடனே ஓகே சொல்லி நடித்து வருகிறார்.


இதனிடையே கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. அத்தோடு படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூழல் வெப் தொடர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுததடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.அதாவது  மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமாக மாறிய தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் தமிழ் ரீமேக், விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ், கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது 


எனினும் இதேபோல அர்ஜூனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே, இவரின் சொப்பன சுந்தரி படத்தின் சூட்டிங்கும் முற்றிலும் நிறைவடைந்து விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளியை அடுத்து ஐஸ்வர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்தோடு தன்னுடைய திறமையால் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மேலும் கைவசம் அதிகமான படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து அந்தப் படங்களில் நடித்தும் வருகிறார்.


Advertisement

Advertisement