• Jul 24 2025

சூப்பர் சிங்கர் மேடையில் மகளால் கண்ணீர் வடித்த தாய்... வெளியான சூப்பர் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9-ஆவது சீசன் ஆனது நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்திருந்தார். 

இந்தப் போட்டி நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை அருணா பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது சிரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. 


இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் சிறுமி ஒருவர் பாடி முடித்ததும் "எவ்வளவோ தடைகளைத் தாண்டி இன்று இந்த மேடையில் நிற்பது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது" எனக் கூறி அழுகின்றார்.


அதுமட்டுமல்லாது நடுவர்களை பார்த்து உங்கள எல்லாம் பார்ப்பேன் என்று நினைச்சுக்கூடிப் பார்க்கல, உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததும் ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது" எனவும் கூறுகின்றார். இவற்றைப் பார்த்ததும் அவரின் தாயாரும் உடனே கண் கலங்குகின்றார்.  

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement