• Jul 25 2025

சூர்யா தோளில் சாய்ந்த வெண்ணிலா... கட்டியணைத்த கணவர்... 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் சூப்பர் சீன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த  கதைப்படி தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது குறித்த ஊரில் ஒரு பிரச்சினை ஏற்படவே சூர்யா அதை தட்டிக் கேட்கிறார். 


இதனால் சூர்யா மீது பயங்கர கோபம் கொள்ளும் ரவுடிகள் அவரை துரத்த ஆரம்பிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு வேகமாக செல்லும் சூர்யா ஒரு வைக்கோல் போருக்குள் நுழைந்து தப்பிக்கிறார். அந்த வைக்கோல் போரில் காரில் வெண்ணிலாவும் சூர்யாவும் நாள் முழுக்க அமர்ந்திருக்கின்றனர். 

அப்போது அந்த சமயத்தில் பாம்பு ஒன்று அவர்களின் காருக்குள் ஏறியுள்ளது. அதனைக் கண்டதும் வெண்ணிலா பயத்தில் கத்தி சூர்யாவின் தோளில் சாய்கின்றார். சூர்யா உடனே தனது கைகளால் வெண்ணிலாவைக் கட்டியணைத்து ரசிக்கின்றார். 


மேலும் வெண்ணிலா பயமாக இருப்பதாகவும், பாம்பை போக சொல்லுமாறும் கூறுகின்றார். அதற்கு சூர்யா தனக்கு இதமாக இருப்பதாக கூறிப் பதிலளிக்கின்றார். மேலும் பாம்பு தன்னிடம் முத்தம் கேட்பதாகவும் தான் கொடுக்கப் போவதாகவும், உனக்கும் முத்தம் வேணும் என்றால் சொல்லு என வெண்ணிலாவிடம் கிண்டலாக கூறுகின்றார். 

இந்த சீன் ஆனது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றது. இதனால் ரசிகர்கள் குறித்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.  


Advertisement

Advertisement