• Jul 24 2025

ரொமான்டிக் டான்ஸ் ஆடிய சூப்பர் சிங்கர் மானசி... அதுவும் இவர் கூடவா..? என்ன ஒரு டான்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியானது பாடகராக வேண்டும் என்ற கனவில் இருக்கின்ற பல திறமைசாலிகளுக்கும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதனை கூட பிரபலாமாக மாற்றுகின்ற பெருமை இந்த மேடையையே சாரும். 


இவ்வாறாக பாடகர்களின் சாதனைக்களமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒருவரே மானசி. இவர் சீசன் 8 இல் போட்டியாளர்களாக களமிறங்கியவர். அந்த சீசனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் என்றால் அது மானசி தான்.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து இருக்கின்றார்.



இவ்வாறாக தனது திறமையை வெளிப்படுத்தி வந்த மானசி ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியிருந்தார். ஒரு பாடகியாக திரைத்துறையில் கால் பதித்துள்ள மானசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தான் பாடும் வீடியோ அல்லது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.


அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் ரொமான்டிக் பாடலான "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே" என்ற பாடலுக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனாவுடன் சூப்பராக நடனம் ஆடி அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement