• Jul 23 2025

தலைவர் 170 படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அடுத்த ஷுட்டிங் இங்கு தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து  ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அண்மையில் ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. 


அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.  இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 இப்படத்திற்கு அனிரூத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் ஸ்க்ரீனில் எப்படி இருப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருக்கும் அமிதாப் பச்சன் சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் இணைந்தார். அப்போது அவரும் ரஜினியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.


இந்நிலையில் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது திருநெல்வேலியில் மும்முரமாக நடந்துவந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாம். தற்போது படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக மும்பையில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement