• Jul 25 2025

'நாய் சேகர் ரிட்டன்ஸ்'படத்திலிருந்து இன்று வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.இப்படத்தில்இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதோடு லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் இன்று (நவம்பர் 14-ந் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement