• Jul 25 2025

நடிகர் ரஜினிகாந்தின் 172 பற்றிய வெளியாகிய சூப்பர் அப்டேட்- அப்போ கடைசிப் படம் இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் அண்மையில் தான் முடிவடைந்தது.படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இப்படம் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினிகாந்த்.தலைவர் 171 தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியே தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க வேண்டும் ஆசைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.


அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கடைசிப் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி - ஷங்கர் கூட்டணியில் ஏற்கனவே சிவாஜி, எந்திரன், 2.O ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகின.சிவாஜி படத்தை ஃபேன்பாய் சம்பவமாக டைரக்ட் செய்திருந்த ஷங்கர், எந்திரன், 2.O படங்களை சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் இயக்கியிருந்தார். 

இதில், 2.O பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தான் 2.O உருவாகியிருந்தது. இதனால், 2.O படத்தின் அடுத்த வெர்ஷனாக 3.O படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்ததும் சூர்யாவுடன் இணைந்து வேள்பாரி படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், ரஜினி தனது கடைசி படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என விரும்புவதால் வேள்பாரி தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், 3.O படத்தை லைகா அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் தான் தலைவர் 172 பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement