• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 இன் ஆரம்பம் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் முக்கியமான ஷோ தான் பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு தான் பிக்பாஸ் சீசன் 6 ஆனது முடிவுக்கு வந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னராகத் தேர்வானார்.

மேலும் இதில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியும் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பிக்பாஸ் வேலைகளில் குழுவினர் இறங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.


தற்போது பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது, ஆனால் இதுவரை நிகழ்ச்சி குறித்து ஒரு அப்டேட்டும் வந்தது இல்லை.இந்த சீசனில்  இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்போகிறார்களாம்.

இதனால் மக்கள் யார் யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதே போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்றும் நம்பப்படுகின்றது.



Advertisement

Advertisement