• Jul 23 2025

சூப்பரு...! மீண்டும் அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இளைஞர்களை கவர நாளுக்கு நாள் தன் இசையை புதுப்பித்து கொண்டே இருக்கும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. 90 களில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து காலம் கடந்தும் அந்த பாடல்களை இளைஞர்கள் இன்றும் வைப் செய்யுமளவு அசாத்திய இசைக்கு சொந்தக் காரார் இவர்.

யுவன் சங்கர் ராஜா இசை மட்டுமல்லாமல் திரைப்படங்கள் தயாரித்து வருவதிலும் சிறந்து விளங்குகிறார். 

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் YSR Films நிறுவனமும் இயக்குனரும் நடிகருமான அமீர் அவர்களின் அமீர் பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் புதிய படத்திற்காக இணைந்துள்ளது என்ற செய்தியினை யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பு அமைந்த ‘மௌனம் பேசியதே’,’ராம்’, ‘பருத்திவீரன்’,’யோகி’, ‘ஆதி பகவன்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் அமீர் - யுவன் கூட்டணி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்யப்படலாம் அல்லது புதிய படமாக அது இருக்கலாம் என்ற கருத்து தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இருந்தாலும் அமீர் யுவன் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவு வரவேற்பு தற்போது இணையத்தில் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement