சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள். இவர் அறிமுக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர்.
முதல் படம் என்றாலும் இதற்கு முன் அவரது கடை விளம்பரங்களுக்காக நடித்திருக்கிறார். எனவே கேமரா, லைட்ஸ் எல்லாம் அவருக்கு புதிது இல்லை.முதல் படத்திலேயே மாஸான கதையை தேர்வு செய்து கலக்கலாக நடித்துள்ளார்.
ஜெ டி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்படத்தினூடாகவே ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றார்.
மேலும் இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அத்தோடு தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணனின் நடிப்பை நேரில் காண சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தி லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பிற்கே சென்றுள்ளார். அங்கு இருவரும் சந்தித்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்
- பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி-திரையுலகில் பெரும் பரபரப்பு..!
- 40 நாட்களுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மீனா-எங்கு சென்றுள்ளார் தெரியுமா..?
- குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா..? வெளியானது முழு விபரம்..!
- பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு..ஷாக்கில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஆர்த்தி-நடந்தது இது தானாம்-மிரண்டு ஓடும் நெட்டிசன்ஸ்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!