• Jul 25 2025

கண்டிப்பாக இது தண்டைனைக்குரிய குற்றம் இப்படி இருக்க கூடாது - நரிக்குறவ சமுதாயத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி

stella / 2 years ago

Advertisement

Listen News!


சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டு இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது. படம் பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதையடுத்து காலை 8 மணிக்கு பத்து தல படத்தின் FDFS திரையிடப்பட்டது. இதைப்பார்க்க பெண்களும் அதிகளவில் வந்திருந்தனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மூன்று பேரை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.


 இத்தனைக்கும் அந்த 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்திருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இதனை வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி இது குறித்து பேசியுள்ளார். அதாவது இது தப்பான விஷயம். நம்ப முடியல தீண்டாமையை இப்பவும் முன்னெடுத்துச் செல்வது தண்டனைக்குரிய விடயம். தீண்டாமை என்பது இன்டைக்கு இருக்கிற உலகத்தில இருக்கக் கூடாது. இது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டி விடயம். இது தண்டனைக்குரிய குற்றம். இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement