• Jul 23 2025

''சூரி ஒரு தொழிலதிபர்..உங்களுக்கு தெரியுமா?'' - ரகசியம் சொன்ன இயக்குநர் அமீர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

‘மெளனம் பேசியதே’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் நடிகர் ஜீவாவை வைத்து ‘ராம்’ படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்தத் திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். 

அதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அமீர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக பல பேட்டிகளில் பேசி வருகிறார். 

தற்போது வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் அமீர் புதியதாக ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்த ஹோட்டலை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த ஹோட்டலுக்கு 4 AM Coffee & Kitchen என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடையின் ஓபன் விழாவில் இயக்குநர் அமீர் பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது ''நான் இந்த ஓபன் விழாவுக்கு சூரியை அழைத்தது விடுதலை வெற்றிக்காக என்று நினைத்து விடாதீர்கள்.சூரியின் வளர்ச்சியை பார்த்து பிரமித்து இருக்கிறேன்.அவரை வெறும் நடிகராக பார்க்கவில்லை .அவர் ஒரு தொழிலதிபர் .அவர் மதுரையில் உனக்கவகம் ஒன்றை நடத்தி வருகிறார் ..அதனால் அவருக்கு தொழிலை பற்றி நன்றாக தெரியும் என்றதால் அவரை அழைத்தேன்.'' என கூறினார் ..மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருந்தார்.  






Advertisement

Advertisement