• Jul 23 2025

அவமானப்பட்டதற்கு இணங்க பல கோடியை கொட்டிய சூரி...மனைவியால் அவிழ்ந்த உண்மை.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவாக  நடித்திருக்கிறார். அத்தோடு இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார்.

இப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனினும் இதற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு படுச்சோராக நடந்தி கொண்டிருக்கிறது. அத்தோடு இந்நிலையில் பலரது முன்பு சூரி அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்திருக்கும் ரகசியத்தை அவருடைய மனைவி அம்பலப்படுத்தி உள்ளார்.

சூரி இப்பொழுது சாலி கிராமத்தில் ஆபீஸ் போட்டிருக்கிறார். அந்த ஆபீஸ் வாங்கிய பொழுது, அதனை அதிக லாபத்திற்கு சூரியிடம் விலை பேசி விற்று உள்ளனர். ஒன்றுமில்லாத இடத்திற்கு ஏன் இவ்வளவு காசு கொடுத்து வாங்கி விட்டீர்கள் என இதைப் பற்றி சூரியின் மனைவி கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் இப்படியா ஏமாறுவீர்கள். நாலு காசு கையில் வந்ததும் நீங்களும் தலைக்கனத்தில் ஆட பார்க்கிறீர்களா என்றும் திட்டி தீர்த்துள்ளார். அதற்கு சூரி, ‘நான் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது இதே இடத்தில்தான் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடப்பேன். அப்பொழுது ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன்.

என்னை தூக்கிக்கொண்டு வந்து அதற்கு எதிரிலுள்ள இந்த டீக்கடையில் தான் டிபன் வாங்கி கொடுத்தார்கள். இப்பொழுது அந்த இடத்திற்கு எதிரில் ஆபீஸ் வாங்கியதை நினைக்கும் போது நான் பட்ட அவமானத்திற்கு எல்லாம் கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல திரையுலகில்  நுழையும் போது நான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தேன் என்பதை மறக்க கூடாது என்பதற்காகவே இந்த இடத்தை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement