• Jul 26 2025

ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா மற்றும் ஜோதிகா- அட இது தான் காரணமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

சாய் பல்லவி லீட் ரோலில் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் கார்கி. இப்படத்தை இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியள்ளார். இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியுடன் இணைந்து சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் கார்கி என்ற டைட்டில் ரோலில் சாய் பல்லவி நடித்திருந்தார்.

சாய் பல்லவி வசிக்கும் பிளாட்டிற்கு அருகில் உள்ள பிளாட்டில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அந்த வழக்கில் குற்றவாளிகள் லிஸ்ட்டில் சாய் பல்லவியின் அப்பாவின் பெயரும் சேர்க்கப்படுகிறது. தனது அப்பா நிரபராதி என்பதை நிருபிக்கவும், உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரவும் சாய் பல்லவி நடத்தும் சட்ட போராட்டம் தான் கார்கி படத்தின் கதை.

இப்படம் வெளியாகி ரசிகர்களியே பேராதரவும் பெற்று வருகின்றது. இந்நிலையில் கார்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ஆதரவிற்கு நடிகர் சூர்யா, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது கார்கி படத்திற்கு அனைவரும் அளித்துள்ள பேராதரவிற்கு நன்றி. சிறப்பாக எழுதப்பட்டு, சிறப்பாக படமாக்கப்பட்ட கார்கி ஜோ மற்றும் என்னுடைய நினைவில் எப்போதும் நீங்காமல் இருக்கும். படத்தை ஆதரித்த மீடியா, பத்திரிக்கை, நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இப்படி நல்ல படத்திற்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி சார். விரைவில் ஒரு கதையில் நீங்களும் சாய் பல்லவியும் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement