• Jul 24 2025

மனமுடைந்துபோன அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி.. தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24ஆம் தேதி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

நேரில் செல்ல முடியாத சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய இரங்கலை பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்று நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அஜித் வீட்டின் வாசலில் சூர்யா, கார்த்தி கார் வரும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  தீயாய் பரவவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.. 



Advertisement

Advertisement