• Jul 23 2025

வெண்ணிலா காலில் விழுந்து கெஞ்சி மன்றாடிய அவரது அப்பா- சூர்யாவுக்கு தெரிய வந்த உண்மை- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியலானது கல்லூரிக் கதைக்களத்தை மையமாக கொண்டிருந்தாலும் காதல், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.

சூர்யா வெண்ணிலாவைத் திருமணம் செய்திருக்கும் விஷயம் யாருக்கும் தெரியாததால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிந்திருக்கின்றனர். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் சூர்யா வெண்ணிலாவின் தந்தையிடம் பேசப் போகின்றார். அப்போது அவர் வெண்ணிலாவுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ள விஷயத்தையும் சொல்கின்றார். இதைக் கேட்ட சூர்யா அதிர்ச்சியடைகின்றார்.

தொடர்ந்து தனது அப்பா வீட்டுக்கு வந்ததும் வெண்ணிலா அவரது அப்பாவின் காலில் விழுந்து இந்த கல்யாணம் வேணாம் என்று கெஞ்சி அழுகின்றார். பதிலுக்கு அவரது அப்பாவும் வெண்ணிலாவின் காலில் விழுந்து தனது மானத்தை எப்படியாவது காப்பாற்றித் தரும்படி கூறுகின்றார். இதனால் வெண்ணிலா என்ன செய்வது என்று தெரியாமல் அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement