• Jul 25 2025

வாட்டர் பாட்டிலைக் கொடுத்த சூர்யா... போதையில் உளறும் வெண்ணிலா... சூப்பரான 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த  கதைப்படி தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது குறித்த ஊரில் ஒரு பிரச்சினை ஏற்படவே சூர்யா அதை தட்டிக் கேட்கிறார். 

இதனால் சூர்யா மீது பயங்கர கோபம் கொள்ளும் ரவுடிகள் அவரை துரத்த ஆரம்பிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு வேகமாக செல்லும் சூர்யா ஒரு வைக்கோல் போருக்குள் நுழைந்து தப்பிக்கிறார். அந்த வைக்கோல் போரில் காரில் வெண்ணிலாவும் சூர்யாவும் நாள் முழுக்க அமர்ந்திருக்கின்றனர். 


அந்த சமயத்தில் வெண்ணிலாவிற்கு திடீரென பசி ஏற்படுகிறது. பின்னர் கதவை திறந்து பார்க்கும் சூர்யா வெளியில் ரவுடிகள் அமர்ந்து பிரியாணி உண்பதை பார்க்கிறார். அவர்களுக்கு அருகில் சென்று தெரியாமல் பிரியாணியும் ஒரு வாட்டர் பாட்டிலையும் எடுத்து வருகிறார் சூர்யா. பிரியாணியை சாப்பிட்ட வெண்ணிலாவுக்கு விக்கல் ஏற்படுகிறது. 

இதனையடுத்து அவர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்துக் குடிக்க அதில் சாராயம் இருக்கிறது. இதனால் அளவுக்கு அதிகமாக குடித்து காரிலேயே மட்டை ஆகிவிடுகிறார் வெண்ணிலா. மேலும் போதையில் உளறவும் தொடங்குகிறார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement