• Jul 26 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த பிரபலம்- அடடே இவர் பிரபல தொகுப்பாளராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்பவர்கள் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் என்பதால் அந்த ஷோவுக்கு செல்ல அதிகம் போட்டி இருந்து வருகிறது.அந்த ஷோ மூலமாக ஹீரோவாகவும் பலருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற VJ கதிரவன் தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.


ஜோயல் விஜய் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் தான் கதிரவன் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்திற்கு கூடு என பெயரிட்டு இருக்கின்றனர்.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படம் இது என குறிப்பிட்டு இருக்கின்றனர்.


மேலும் கதிரவன் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் நடிகனாவதால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


Advertisement

Advertisement