• Jul 26 2025

அமெரிக்க தீவிரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த ரசிகை..!வீட்டில் அஞ்சலி செலுத்திய சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார். இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார். 


ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார். 


இந்த நிலையில் தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூர்யா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ரசிகையின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement