• Jul 26 2025

7ம் அறிவு திரைப்படத்தில் அந்த வசனம் வேணாம் என்று சூர்யா சொன்னாரு நான் தான் கேட்கல- ஓபனாகப் பேசிய உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2011ல் வந்த திரைப்படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

அந்த படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி கூறி இருக்கிறார்."7ம் அறிவு படத்தில் இடஒதுக்கீடு பற்றிய காட்சி ஒன்று இருக்கும். ஸ்ருதி ஹாசன் அந்த வசனத்தை பேசி இருப்பார். 


முழு படத்தையும் பார்த்த சூர்யா அந்த வசனத்தை நீக்கும்படி என்னிடம் கூறினார்.ஒரு வசனம் தானே இருக்கட்டும் என நான் கூறிவிட்டேன். அப்போது எனக்கு இருந்த அரசியல் புரிதல் அவ்வளவுதான்."


"ஆனால் தற்போது அதை அனுமதித்து இருக்கக்கூடாது என தற்போது உணர்கிறேன். முருகதாஸ் செய்ததும் தவறு என சொல்ல முடியாது, அது அவரது அரசியல் புரிதல்" என உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement