• Jul 25 2025

மாணவர்களின் கல்விக்காக சூர்யா எடுத்த புதிய முடிவு- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் தற்பொழுது வணங்கான் மற்றும் சூர்யா 42 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் சூர்யா நடிப்பைத் தவிர இவரது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். மாவட்ட வாரியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரசிகர்களுக்கு சில வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார். அது என்னவென்றால், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருந்தால் அவர்களின் மேற்படிப்புக்கு உதவ தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 


அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து அரசு பணி கிடைக்க உதவுவதாவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களை தனக்கு பின்னால் இருக்கும் கூட்டமாக நினைக்காமல் அவர்களில் ஒருவராக இருந்து அவர்களுக்கு உதவ சூர்யா எடுத்துள்ள இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement