• Jul 26 2025

அப்பாவையே மிஞ்சிருவாரு போல- தோர் நடிகரின் மகன் என்னம்மா சர்ஃபிங் பண்றாரு.-குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் ஹீரோக்கள் பலரும் ஸ்டண்ட் காட்சிகளுக்கே டூப் போடாமல் நடிப்பவர்கள். ரியல் லைஃப்பிலும் விமானம் ஓட்டுவது, சர்ஃபிங் செய்வது என ஏகப்பட்ட திறமைகளை உடையவர்கள்.அந்த கையில் மார்வெல் திரைப்படங்களில் தோர் கடவுளாக நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். 

அவெஞ்சர்ஸ் படத்திலும் தோர் சீரிஸ் படங்களிலும் தோர் ஆக சுத்தியலை தூக்கி சுற்றி எதிரிகளை பந்தாடி வருபவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறையை கழித்து வருகிறார்.


அலை சறுக்கு சாகசத்தை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பண்ணிய நிலையில், அவரது குட்டி பையன் மற்றும் மனைவியும் சர்ஃபிங் செய்து அசத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அவரது மகன் மட்டுமின்றி கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மனைவி எல்ஸா படாகியும் பிகினி உடையில் தாறுமாறாக சர்ஃபிங் செய்யும் போட்டோக்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.


பீச்சில் மரம் அருகே பிகினி உடையில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மனைவி நின்றிருக்க மரத்தில் இருந்து எகிறி குதித்தபடி கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் செம சேட்டையாக எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement