• Jul 24 2025

காதலன் தலையில் துப்பாக்கியை வைத்து ஷாக் கொடுத்த சர்வைவர் ஐஸ்வர்யா- என்னம்மா இதெல்லாம்....

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழில் வெளியான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சாகசங்களால் ரசிகர்களை கவர்ந்த ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனக்கு நிச்சயம் ஆகி விட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அர்பித் என்பவருடன் சமீபத்தில் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். கூடிய சீக்கிரமே திருமணம் ஆகப் போகும் நிலையில், காதலருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வரும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் அவுட்டிங் போன இடத்தில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அங்கே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டும் ரொமான்ஸ் செய்துக் கொண்டும் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், ரசிகர்களை சற்றே ஷாக் ஆக்கும் வகையில் தனது காதலன் தலையில் துப்பாக்கியை வைத்தபடி செம டெரராகவும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். 


பார்த்து சுட்டுடப் போகுது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டும், என்னங்க கட்டிக்க போற புருஷனை இப்படி கன் பாயின்ட்ல வச்சு கதற விடுறீங்களே என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் போட்டு ஐஸ்வர்யா கிருஷ்ணனை கலாய்த்து வருகின்றனர்.


விரைவில் திருமணம் ஆகவுள்ள நிலையில், காதலருடன் கட்டிப்பிடித்து நிற்கும் போட்டோவில் முகமெல்லாம் பிங்க் ஆகிடுச்சே முதல் முறையாக ஐஸ்வர்யா உன்னை இப்படி பார்க்கிறோம் என அவரது தோழிகளும் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement