• Jul 25 2025

தன் மானத்தைக் காப்பாற்ற மஹாவிடம் கெஞ்சிய சூர்யா- மஹா போட்ட கட்டளை- வெளியான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வர வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எவ்வாறு எல்லாம் போராடுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் ஐஸ்வர்யாவுக்கு நடக்க வேண்டிய திருமணத்தை மஹா செய்து கொண்டார். இதனால் மஹாவைத் திருமணம் செய்த சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் மஹா மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சூர்யா குடித்து விட்டு மஹா ரூமுக்குள் சென்று துாங்கி விடுகின்றார். பின்னர் விடிந்ததும் மஹா ரூமுக்குள் இருந்து சூர்யா வருவதைப் பார்த்து எல்லோரும் தவறாக நினைத்து விட்டனர்.

இப்படியான நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மஹாவிடம் சூர்யா சென்று நேற்று நமக்குள்ள ஒன்றும் நடக்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்களிடம் வந்து சொல்லும்படி சொல்கின்றார்.

ஆனால் மஹாவே நீங்க என் கிட்ட கெஞ்சிக் கேளுங்க போய் சொல்லுகிறேன் என்று சொல்லும் போது சூர்யா அது முடியாது என்று சொல்ல மஹா அப்போ நானும் இந்த ஜென்மத்தில சொல்ல மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement