• Jul 26 2025

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் குழுவில் ஒருவராக நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் இன்று காலையில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

அதில் நடிகர் சூர்யாவை வாழ்த்தி, தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் இதில் " தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, The Academy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா, அவர்களுக்கு எனது பாராட்டுகள்! " என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தற்போது நடிகர் சூர்யா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

மேலும் இதில் " தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் " என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement